Spread the love

#BlogchatterA2Z challenge and NaPoWriMo-2022

Day24-NaPoWriMo-Kumari
Day24-NaPoWriMo-Kumari

ஏப்ரல் மாதம் தேசிய கவிதை எழுதும் மாதமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை எழுதி, 30 நாட்களில் 30 கவிதைகள் எழுத வேண்டுமென்ற சவால் முன் வைக்கப்படுகிறது. இதை NaPoWriMo (National Poetry Writing Month) Challenge என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.

அவ்வகையில் , இந்த வருடம் நான் இந்த சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதி வருகிறேன்.

இதில் சிறப்பம்சமாக “heteronym” அதாவது, பன்முகப் பெயர்கள் என்ற கருத்தை எடுத்து கொண்டுள்ளேன். இதில், ஒரு கவிஞர் பல பெயர்களை கொண்டு எழுதுகிறார். இதை கவிஞரின் புனைப்பெயருடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் . 

மாறாக, பன்முக பெயர்கள் என்ற கருத்தில், கவிஞர் பல பெயர்களை கொண்ட கதாபாத்திரங்களை உண்டாக்கி அதற்கென ஒரு குரலையும் பாணியையும் உருவாக்குகிறார். அந்த கதாபாத்திரங்களின் மூலமாக கவி பாடுகிறார். 

அப்படி ஒரு முயற்சி தான் இந்த உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடர். இன்று, இத்தொடரில் உங்கள் முன் அறிமுகமாகிறாள், குமரி.

 Day24-NaPoWriMo-Kumari-An Excerpt
Day24-NaPoWriMo-Kumari-An Excerpt

குமரி

மாட்டு வண்டில போகையில 
வாட காத்து  வீசையில 
ஒன்ன பத்தி நெனைக்கையில 
நெஞ்சம் மொத்தம் 
முத்த சத்தம் 

எத்தனிச்சு 
என்ன நீ 
ஒரு நொடி 
நெனைச்சாலும் 
முத்தமெல்லாம்,

அத்தான்,

உன் சட்டப்  பை 
சொத்தாகும்


Day30-NaPoWriMo-Zara-An Excerpt

ZARA-A CENTO

In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

Read More
Napowrimo-Day27-Wafa-An excerpt

WAFA-A DUPLEX POEM

In this series of Intuitive poetries that I’m penning for the #BlogchatterA2Z challenge and NaPoWriM…

Read More
Day24-NaPoWriMo-Kumari-An Excerpt

குமரி – ஒரு கவிதை

NaPoWriMo-உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடரில், இன்று, உங்கள் முன் அறிமுகமாகிறாள், குமர…

Read More
Day17-NaPoWriMo-Mozhi-An Excerpt

மொழி–ஒரு கவிதை

NaPoWriMo-உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடரில் இன்று, உங்கள் முன் அறிமுகமாகிறாள், மொழி.…

Read More

யாழினி – ஒரு கவிதை

இந்த வருடம் நான் NaPoWriMo சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்…

Read More

I’m participating in #BlogchatterA2Z and NaPoWriMo.


Spread the love