Spread the love


#BlogchatterA2Z challenge and NaPoWriMo-2022

Day10-NaPoWriMo- Yazhini
Day10-NaPoWriMo- Yazhini

ஏப்ரல் மாதம் தேசிய கவிதை எழுதும் மாதமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை எழுதி, 30 நாட்களில் 30 கவிதைகள் எழுத வேண்டுமென்ற சவால் முன் வைக்கப்படுகிறது. இதை NaPoWriMo (National Poetry Writing Month) Challenge என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.

அவ்வகையில் , இந்த வருடம் நான் இந்த சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதி வருகிறேன்.

இதில் சிறப்பம்சமாக “heteronym” அதாவது, பன்முகப் பெயர்கள் என்ற கருத்தை எடுத்து கொண்டுள்ளேன். இதில், ஒரு கவிஞர் பல பெயர்களை கொண்டு எழுதுகிறார். இதை கவிஞரின் புனைப்பெயருடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் . 

மாறாக, பன்முக பெயர்கள் என்ற கருத்தில், கவிஞர் பல பெயர்களை கொண்ட கதாபாத்திரங்களை உண்டாக்கி அதற்கென ஒரு குரலையும் பாணியையும் உருவாக்குகிறார். அந்த கதாபாத்திரங்களின் மூலமாக கவி பாடுகிறார். 

அப்படி ஒரு முயற்சி தான் இந்த உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடர். இன்று, இத்தொடரில் உங்கள் முன் அறிமுகமாகிறாள், யாழினி.

 Day10-NaPoWriMo- Yazhini- An Excerpt
Day10-NaPoWriMo- Yazhini- An Excerpt

யாழினி

இமைகள்—
                 இணையட்டும்…
இதழ்கள்—
		 இசையட்டும்…
      இனி நீயும் நானும்
           இரு தேகம்— ஒன்றாய்…
             	   மலர்வோம்
                      	மகிழ்வோம்…

   காற்றில் ஒரு யாகம்
         அதில் காமம் ஒரு யோகம்
      		  மோகம் மிகுந்தால்,
                               மறைந்தால்—
                 மஞ்சம் கடந்தால் 
			 மேனி துறவோம்…                       
                         மோட்ச மேகத்தில் மிதப்போம் 

Spread the love