#BlogchatterA2Z challenge and NaPoWriMo-2022

ஏப்ரல் மாதம் தேசிய கவிதை எழுதும் மாதமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை எழுதி, 30 நாட்களில் 30 கவிதைகள் எழுத வேண்டுமென்ற சவால் முன் வைக்கப்படுகிறது. இதை NaPoWriMo (National Poetry Writing Month) Challenge என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.
அவ்வகையில் , இந்த வருடம் நான் இந்த சவாலுக்காக உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) என்ற கருப்பொருள் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதி வருகிறேன்.
இதில் சிறப்பம்சமாக “heteronym” அதாவது, பன்முகப் பெயர்கள் என்ற கருத்தை எடுத்து கொண்டுள்ளேன். இதில், ஒரு கவிஞர் பல பெயர்களை கொண்டு எழுதுகிறார். இதை கவிஞரின் புனைப்பெயருடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் .
மாறாக, பன்முக பெயர்கள் என்ற கருத்தில், கவிஞர் பல பெயர்களை கொண்ட கதாபாத்திரங்களை உண்டாக்கி அதற்கென ஒரு குரலையும் பாணியையும் உருவாக்குகிறார். அந்த கதாபாத்திரங்களின் மூலமாக கவி பாடுகிறார்.
அப்படி ஒரு முயற்சி தான் இந்த உள்ளுணர்வு கவிதைகள் (“Intuitive Poetry”) தொடர். இன்று, இத்தொடரில் உங்கள் முன் அறிமுகமாகிறாள், ஷாம்பவி . இதோ, அவளின் எழுத்தும் உணர்வும், ஹைக்கூ கவிதைகளாய்.

ஷாம்பவி
உன்னிடமிருந்து விலகச் சொன்னாய்
நெருங்கிக் கொண்டேன் என்னிடம் -விலகச்
சொல்லியே உணர்த்தினாய்-நீ, நான் வேறல்ல
உரையாடல்கள் நின்றதால்
மௌனத்தை மொழி பெயர்க்கிறேன்
அகராதியில் அடங்கவில்லை- அன்பு
விலகல்கள் பரஸ்பரமானால்
விஸ்மயங்கள் யதார்தமாகும்
விண்ணும் மண்ணுமாய் ஓர் தொடர்கதை
இத்தொடரில் இடம்பெற்றுள்ள மற்ற கவிதைகள் இதோ:
பொதுவாக கவிதைக்கும் எனக்கும் வெகு தூரம். எனவே முழுதாக எனக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஷாம்பவி – அன்னை சக்தியின் பெயர். சிவமும் சக்திமும் ஊடல் கொள்ளும் பொழுதை வைத்து வாசித்தேன். பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
கவிதையின் அழகே அதை பல விதமாய் பார்க்க முடியும், எடுத்துக்கொள்ள முடியும். உங்களின் பார்வையும் ஒரு வித அழகே. உங்கள் ஆதரவு மற்றும் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி 🙂