Spread the love

PC: Designed by the Author using Canva
தூரமாய் அவள் தெரிகையில்,
துள்ளி எழுந்தது என் மனம்...

தொலைவினில் இருப்பினும் அவளின் பிரகாசம்,
என் இதயத்தில் ஒளி வீசிச் சென்றன...

அவள் கூக்குரலிட்டு என்னை நெருங்க,
எனது இதயத் துடிப்பு பல மடங்கு ஆகின...

அருகில் துணைவி துணை நிற்க,
என் மனம் ஏனோ அவளையே நாடின...

துணைவியின் பேச்சை விட - அவளின்
கூக்குரல்  எனக்கு இனிமையாய் ஒலித்தன...

அவளின் வளைவுகளை ரசித்து நிற்க - அவளோ
என் அருகில் தயங்கியபடியே வந்தாள்...

அவளின் வேகமோ குறைந்தது,
ஆனால் அவள் செய்த மாயம் - ஏனோ
 என்  இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்தது...

அவள் அருகே செல்ல துடிக்கையில்,
என் துனைவியே என் கையைப் பிடித்து,
அவளிடம் அழைத்துச் சென்றாள்!!

திகைத்து நின்ற நான்,
என் துணைவியுடன் ஏறினேன்,

என் முதல் காதலான ""  புகைவண்டியில்  "...

22170cookie-checkஎன்னவனின் எண்ணங்கள்- ஓர் காதல் கவிதை
Spread the love