
காத்திருப்பில் காதல் வளர்க்கின்றேன்
அவள் கூந்தல் இடுப்பு அளவு இருக்கக்கூடும் எனக்கும் அவளுக்கும் இருக்கும் ஒரு அடி இடைவெளியை காற்றுவாக்கில் கலைத்து என் முகம் வருடி கதைத்து செல்கிறது மல்லிகைக்கு வாசமுண்டு அறிவேன் நான் ஆனால் இவள் சூடும் பூக்களுக்கு வாசத்துடன் சேர்ந்து வார்த்தைகளும் உண்டென்று அறிந்ததில்லை மல்லி மொட்டுக்கள் என் மார்பில் முத்தமிட்டு மனதில் கவி பாடின அவளை பற்றி அளவாகவே பேசுவாள் இருந்தாலும் பல ஜன்ம பரிச்சயம் போன்ற உணர்வை பரிசளித்து போவாள் அவள் சிரிக்கையில் அவளின் கை வளையல்கள் சற்றே சிணுங்கும் அவ்வளவுதான் அமைதியான சிரிப்பு அவளுடையது இருவர் மட்டுமே அறிந்த ரகசியமாய் பெண்கள் காதல் கொள்ளும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமாம் எந்த அளவு உண்மையென்று அவளிடம் கேட்க தயங்கினேன் ஆனால் அவளுடன் அளவளாவும் போது அதை என்னுள் உணர்கிறேன் கண்டுகொண்டேன் காதலை அறிந்தோ அறியாமலோ தயக்கத்துடனே அவள் பட்டு கைகள் என்னை தொட்டு செல்கின்றன எனக்காக இசைந்த தென்றலின் தாலாட்டு போல் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி கண்டுபிடித்து பரிசளிப்பாள் - பலநேரம் தானும் படிப்பாள் புத்தகத்துடன் சேர்த்து என் மனதையும் ஆனால் கம்பனையும் கீட்ஸையும் ஒரே மூச்சில் பேசுபவளுக்கு தன் காதலை சொல்ல மட்டும் தயக்கம் என்னவோ? அவளே அறிவாள் நானோ காத்திருப்பில் காதல் வளர்க்கின்றேன்
இதை படிக்கவும்:
///அவளை பற்றி
அளவாகவே பேசுவாள்
இருந்தாலும் பல ஜன்ம பரிச்சயம்
போன்ற உணர்வை
பரிசளித்து போவாள்///
அவ்வளவுதான். கவிதை அங்கேயே கனவு காண வைத்துவிடுகிறது. அடுத்த வரிக்கு விழியை நகர்த்த கியரை மாற்றவேண்டி இருக்கும் போல. நன்றிகள்.
கியர் போட்டு அடுத்த வரிக்கு மாறும் நிர்பந்தம் இங்கு இல்லை …கனவுலகிலேயே லயித்திருங்கள்!
உங்கள் வருகைக்கும், வாழ்த்து கூறும் வரிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙂