A design on Canva that reads தெளிவில் இன்பம்- தமிழ் கவிதைகள்.
Designed by the Author on Canva

வெவ்வேறு தருணங்களில் எழுதிய நாலு கவிதைகள் (கிறுக்கல்கள்), இன்று ஒன்று சேரும்போது புதியதோர் பரிமாணம்கொண்டு அவதரிக்கின்றன.

ஏனோ தெரியவில்லை, சில தத்துவார்தங்கள் தாய் மொழியில் மட்டுமே தெளிகின்றன .

பகிரவும், சிந்திக்கவும், இதோ சில கிறுக்கல்கள்…


வாழ்வின் வெற்றிகள்
வெறுமைகளை அகற்றுமென
வாழவும் மறந்து
ஓடி களைத்து
வாழ்வாதாரத்திற்கும் மேலாய்
சேகரித்தப்பின்
மதி ஒளி பெருகும்-
நிறைந்த வெறுமை ,
வெறும் வெற்றின்பங்களே!!
தோழா
நிலையானதை தேடிச் செல்
தாமதங்களும் தாங்க தகுவாய்
வெறுமையையும் விரும்பி ஏற்பாய் 

பிறவிகள் பல
பிறந்தாயிற்று
பிடிப்பில்லாமல்
ஃபீலிங்க்ஸற்ற
ஃபீனிக்ஸ் பறவை


இடி மின்னல்
புயல் மழை
நனைந்த நான்,
நனையா துறவி


மறப்பதெல்லாம்
மாயையாகுமென்றால்,
மாயனே,
மெய்ப்பொருள் முன்னிட்டும்
உன் நினைவுகள் மட்டும்
மறவாதிருக்கட்டும்.



This post is a part of Blogchatter Half Marathon.

6520cookie-checkதெளிவில் இன்பம்- தமிழ் கவிதைகள்