தமிழ் கவிதை

பிறந்தான் அவன் அவனாய் வளர்ந்தான் அவன் அவளாய் கம்பீரம் கொண்டான் அவனாய் நளினம் கண்டான் அவளாய் மாற்றங்கள் கண்டான் அவனாய் ஒதுக்கப்பட்டான் அவளாய் விமர்சனங்கள் ஏற்றான் அவனாய் முன்னேற துடித்தான் அவளாய்... அவனும் அவளுமாய் ஓர் உடலில் தன்னுள் கண்டான் அவனும் அற்ற அவளும் அற்ற திருநங்கையாய் அவன்(அவள்?)!! மூடர்கள் உலகம் கோஷங்கள் முழங்க அர்த்தநாரீஸ்வரரை ஏற்ற மனம் பக்குவம் அற்று ஒதுக்கி தான் வைத்தது திருநங்கையை திரு எனும் மரியாதை வார்த்தையில் மட்டும் கொண்டதாய்... தூஷணைகளும் தூற்றல்களும் துரத்தும் சமூகத்தில் துணிதலும் தன்னம்பிக்கையுடனும் துரத்திச் சென்றாள் தன் கனவினை... இன்று எதிர் கோஷங்கள் எத்தனையே முழங்கினாலும் இவள் சலங்கையின் சலனம் பதிலாகும் மரண அடியாய்!!
This post is a part of Blogchatter Half Marathon.