நான் காதல் சொன்னபோது

நீரிடம் காதல் சொன்னேன்
முத்தமிட்டு சென்றது
மழைச் சாரல்

ஆகாயத்திடம் காதல் சொன்னேன்
வண்ணமாய் சிரித்தது
வானவில்

காற்றிடம் காதல் சொன்னேன்
காவியமாய் மலர்ந்தது
காகிதப் பூக்கள்

நிலத்திடம் காதல் சொன்னேன்
வழிவகுத்து நின்றது
உன் வீட்டுச் சாலை

நெருப்பிடம் காதல் சொன்னேன்
உயிர்ப்பாய் எழுந்தது
வெட்கச் சுடர்

உன்னிடம் காதல் சொன்னேன்
ஆறாம் பூதமாய் ஆக்கிரமித்தாய்
பஞ்சபூதங்களின் எல்லையையும் கடந்துபோய்...

33670cookie-checkநான் காதல் சொன்னபோது – ஓர் காதல் கவிதை