Spread the love

PC: Designed by the Author using Canva

எங்கு எழுகிறது காதல்?

புல்  நுனி பனித்துளிகள் படும் 
பட்டு பாதங்களிலா ?

தொட்டும் தொடாமலும் 
பட்டும் படாமலும் 
தென்றல் முத்தமிட்டுச்செல்லும் 
மலர் மேனியிலா ?

கார்மேகமும் கதிரவனும் ஆடும் 
கண்ணாம்பூச்சி  ஆட்டத்தை 
காணும் கண்களிலா ?

ருதுவான அன்பின் மொழி 
அமைதியின்  அரவணைப்பில் 
ரீங்காரமாய் ஒலிக்கும் செவிகளிலா ?

முத்தமிட்டு ஒப்பந்தம் செய்த 
விண்ணுக்கும் -மண்ணுக்குமான 
காதலை மண்வாசனையில் 
நுகரும் நாசிகளிலா ?

உன்னோடு உறவாடும் வேளையில் 
நேசக்கடல் நீர்வீழ்ச்சியாய் எழும் 
நெஞ்ச குழியிலா? 

தென்றலிலா?
தொடுதலிலா ?

காற்றிலா?
காரணத்திலா ?

உறவிலா?
ஊடலிலா ?

மயக்கத்திலா ?
மதியிலா ?

மௌனத்திலா?
மரணத்திலா ?

உன்னிலா?
 என்னிலா?

எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல் 

எங்கிருந்து எழுகிறதோ 
கட்டுக்கடங்காத காதல் 
அங்கேயே  நான் 
உடன் கட்டை ஏறிவிடுவேன் 

எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல்!
22850cookie-checkஎங்கு எழுகிறது காதல்- ஓர் கவிதை
Spread the love