ஓர் காதல் கவிதை

பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
For enriching your life one verse at a time
பறந்தவெளியிலிருந்து அவனும் இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு தனிமையை தொலைக்கிறார்கள் தொலைவிலிருந்து கண்டவாறு காத்திருக்கிறேன் நான் துணையாக ஒருநாள் என்னை தேர்ந்தெடுப்பாள் என்றெண்ணி
கடலின் ஆழம் கற்றறிந்தேன் உன் மௌனத்தில் நீந்தி எழுகையில் முத்தும், முத்தங்களும் பொக்கிஷங்கள்
உன் ஈரக் கசிவுகளில் இழைந்தோடுகிறது என் இதய ராகம் மழை முத்தமிட்ட இலைகள்
காகிதப் பூவும் மலர்ந்தன -உன் காதலின் கதகதப்பில் என் புத்தகத்தில் உன் பெயர்
மேலும் படிக்க:
வெவ்வேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.
முகமூடிகள் பல முடிந்து கொண்டன- முந்தானை முடிச்சில்...
காற்மேகம் படற கலங்கியது கட்டுடல்- கட்டிலில் வேசி...
சஞ்சலமற்ற மனங்கள் சாவகாசமாய்- சவப்பெட்டியில் சடலங்கள்!
வெவேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.
இரு தனி வரிகளாய் இருந்த அவளும் அவனும் இணைந்து- ஒரே பொருள் தரும் குழந்தையாய்-ஓர் கவிதை!
உயிர்களை இணைத்து, பின்
பிரிவினால் பிணமாக்கும்,
பாசக்கயிறு !
தலைகீழாய் தொங்கி நடனமாடும் கழைக்கூத்தாடி!
பிறருக்கு பலனை சொல்லும் அவளுக்கு, ஏனோ தெரியவில்லை, தனக்கு விதித்தது மரணம் என்று...
வெவ்வேறு தருணங்களில் எழுதிய நாலு கவிதைகள் (கிறுக்கல்கள்), இன்று ஒன்று சேரும்போது புதியதோர் பரிமாணம்கொண்டு அவதரிக்கின்றன.
ஏனோ தெரியவில்லை, சில தத்துவார்தங்கள் தாய் மொழியில் மட்டுமே தெளிகின்றன .
பகிரவும், சிந்திக்கவும், இதோ சில கிறுக்கல்கள்…
வாழ்வின் வெற்றிகள் வெறுமைகளை அகற்றுமென வாழவும் மறந்து ஓடி களைத்து வாழ்வாதாரத்திற்கும் மேலாய் சேகரித்தப்பின் மதி ஒளி பெருகும்- நிறைந்த வெறுமை , வெறும் வெற்றின்பங்களே!! தோழா நிலையானதை தேடிச் செல் தாமதங்களும் தாங்க தகுவாய் வெறுமையையும் விரும்பி ஏற்பாய்
பிறவிகள் பல பிறந்தாயிற்று பிடிப்பில்லாமல் ஃபீலிங்க்ஸற்ற ஃபீனிக்ஸ் பறவை
இடி மின்னல் புயல் மழை நனைந்த நான், நனையா துறவி
மறப்பதெல்லாம் மாயையாகுமென்றால், மாயனே, மெய்ப்பொருள் முன்னிட்டும் உன் நினைவுகள் மட்டும் மறவாதிருக்கட்டும்.
This post is a part of Blogchatter Half Marathon.
பிறந்தான் அவன் அவனாய் வளர்ந்தான் அவன் அவளாய் கம்பீரம் கொண்டான் அவனாய் நளினம் கண்டான் அவளாய் மாற்றங்கள் கண்டான் அவனாய் ஒதுக்கப்பட்டான் அவளாய் விமர்சனங்கள் ஏற்றான் அவனாய் முன்னேற துடித்தான் அவளாய்... அவனும் அவளுமாய் ஓர் உடலில் தன்னுள் கண்டான் அவனும் அற்ற அவளும் அற்ற திருநங்கையாய் அவன்(அவள்?)!! மூடர்கள் உலகம் கோஷங்கள் முழங்க அர்த்தநாரீஸ்வரரை ஏற்ற மனம் பக்குவம் அற்று ஒதுக்கி தான் வைத்தது திருநங்கையை திரு எனும் மரியாதை வார்த்தையில் மட்டும் கொண்டதாய்... தூஷணைகளும் தூற்றல்களும் துரத்தும் சமூகத்தில் துணிதலும் தன்னம்பிக்கையுடனும் துரத்திச் சென்றாள் தன் கனவினை... இன்று எதிர் கோஷங்கள் எத்தனையே முழங்கினாலும் இவள் சலங்கையின் சலனம் பதிலாகும் மரண அடியாய்!!
This post is a part of Blogchatter Half Marathon.
தீராத தாகம்
அதன் தாக்கம் தன்னை
தூக்கம் மீது தெளித்து
துன்புறுத்த
நித்தமும் நித்திரை
நிந்தனைக்கு உள்ளானது
ஆம்
தீராத தாகம்….
இதுவும் ஒரு வித போதையே
காதல் கண்ட கண்கள்
நேசம் கொண்ட நெஞ்சம்
மோகம் கொண்ட தேகம்
என இவை அனைத்தையும்
தூக்கி எரிந்து விட்டு
தீராத தாகத்துடன்
நித்தமும்
நித்திரையின்றி
நீரில்லா நதியில்
நீந்த துடித்து
ஏங்கி தவிக்கும்
போதை இது….
மானிடா!
தெரிந்துகொள்…
உன் பள்ளி பருவம்
என்னுள்ளும் படர்ந்ததுண்டு…
உன் தாய் மடி ஏக்கம்
என் நாடிகளிலும் கலந்ததுண்டு
உன் பருவக் காதல்
என் நெஞ்சிலும் மலர்ந்ததுண்டு…
உன் நடுநிசி சோகம்
என் தலையணையையும் நனைத்ததுண்டு…
உன் பஞ்சத்தின் போராட்டம்
என் வயிற்றையும் வாட்டியதுண்டு
உன் வாழ்வின் நிதர்சனம்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
புரிந்துக்கொள்…
உன் வாழ்வின் நிதர்சனங்கள்
அத்தனையும்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
பின் ஏனடா
இவள் எழுதுகோல் பிடிக்கையில்
“இவள்”
எழுதுகோல் பிடிக்கையில் மட்டும்
இவளின்
காதல் வர்ணனைகளையும்
பஞ்சத்தின் பாடல்களையும்
காமத்தின் கற்பனைகளையும்
பாசத்தின் பிரதிபலிப்புகளையும்
ஒரு எழுத்தாளரின் சுதந்திரம்
சுடர்விடுவதாய் காணாமல்
ஒரு பெண்ணாகவோ , மனைவியாகவோ,
மருமகளாகவோ, மாமியாராகவோ
அவளை மனதில் கொண்டு
அவள் எழுத்துகளை
அவள் வாழ்வோடு ஒப்பனையிட்டு
அதன் பிரதிபலிப்பேன
விமர்சனம் கொண்டு
அவள் வார்த்தைகளுக்கு
அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?
மானிடா…
புரிந்துக்கொள்…
உன் வாழ்வின் நிதர்சனங்கள்
அத்தனையும்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
ஆனால் உன்னில் இல்லா
வார்த்தைகளின் மோகமும்
வர்ணனைகளின் தாகமும்
என்னுள் நான்
கண்டதுண்டு….
தீராத தாகம் இது…
ஆம்…
தீராத தாகம் இது…
ஒரு பெண், மனைவி,
தாய் , மருமகள் ,
ஆசிரியை என
அத்தனையும் மறந்து
வாழ்வின் நிதர்சனங்களை
வர்ணனைகளால் செதுக்கும்
வார்த்தைகளின் சிர்ப்பியாய்,
ஒரு எழுத்தாளராய்
ஒரு எழுத்தாளராய் மட்டுமே
என்னையும்
என் வார்த்தைகளையும்
இந்த உலகம் அறியுமானால்….
இந்த தாகம்…
தீராத இந்த தாகமும்
தீர்ந்தப்பின் துயில் கொள்ளும்
திருப்தியாய்!!
P.S: This poem was featured in Women’s Web .